பிரதமர் அலுவலகத்தின் பணிப்புரைக்கமைய தூர இடங்களிலிருந்து கொழும்புக்கு வரும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
அதற்கமைய மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.