சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 48 மணித்தியாலங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் எரிபொருள் வழங்கும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.