டீசலை அதிக விலைக்கு விற்கும் தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும்: பந்துல குணவர்தன!

Date:

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

போக்குவரத்து அமைச்சில்நேற்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுபோக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக நெருக்கடியான சூழ்நிலையிலும் தனியார் பேரூந்துகளுக்கு போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கள் ஊடாக டீசல் விநியோகிக்கப்படுகின்றன.

நாளாந்தம் 5000 அதிகமான பேரூந்துகளுக்கு டிபோக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், அவற்றில் 70 சதவீதமான பேருந்துகள் மாத்திரமே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன.

பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருளை பேரூந்து உரிமையாளர்கள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரத்தில் ஈடுப்படுவதை அவதானிக்க முடிகிறது என போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

டிபோக்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொண்டு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படாமல், எரிபொருளை அதிக விலைக்கும் விற்பனை செய்யும் பேரூந்து உரிமையாளர்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அரச பேருந்து சேவையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் 40 பேரூந்துகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...