தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில புலம் பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் இதற்காக நாட்டில் இனவாதத்தை ஒழிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் இந்தியா தலையிடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.
அவ்வாறு பிரச்சினைகளை தொடருமென்றால் இந்தியாவுடன் இலங்கையை இணைத்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.