மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு!

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை குறித்த பயணத்தடையினை எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(திங்கட்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அதன் காரணமாக அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...