மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும்!

Date:

ஜூலை 10 ஆம் திகதி காலை முதல் மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார் பேரூந்துகள் இடையூறு காரணமாக மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதங்களில் அதிகளவான பயணிகள் பயணிக்க வந்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் இ.போ.ச மற்றும் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பயணிக்கும் பல பஸ்கள் இன்று இயங்காததால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிப்போ ஊழியர்கள் நேற்று (ஜூலை 9) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்று பணிக்கு வந்த சில சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், சில பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் இ.போ.ச டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...