ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, மாலைத்தீவின் தலைநகரான மாலேயில் இலங்கையர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறும், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்படுகின்றனர்.
மேலும், தற்போது மாலைத்தீவில் உள்ள உல்லாச விடுதியில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த போதிலும், இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை மாலைதீவு ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜைகளை பொலிஸார் கலைத்துள்ளனர்.
Police have dispersed the crowd of Sri Lankan citizens residing is Maldives who were protesting against the Maldivian government for providing a safe haven to President Gotabaya Rajapaksa who fled Lanka in the early hours of Wednesday.
📹 @adhadhumv pic.twitter.com/N5Qk8Qgrqz
— Adhadhu (@AdhadhuMV) July 13, 2022