மாலைத்தீவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, மாலைத்தீவின் தலைநகரான மாலேயில் இலங்கையர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறும், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்படுகின்றனர்.

மேலும், தற்போது மாலைத்தீவில் உள்ள உல்லாச விடுதியில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த போதிலும், இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாலைதீவு ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இலங்கை பிரஜைகளை பொலிஸார் கலைத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...