‘மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை’: எரிசக்தி அமைச்சர் காஞ்சன

Date:

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார சபையின் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தை பிரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மின்சார சபை2014 முதல் புதிய பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் எதையும் தொடங்கவில்லை அல்லது இயக்கவில்லை.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே முன்னோக்கி செல்லும் வழி என்றாலும், இதுபோன்ற திட்டங்களை எளிதாக்கும் அணுகுமுறை பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வு தேவை என்பதை ஒப்புக்கொண்ட அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டத்துடன் இது தொடங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...