முன்னோடித் திட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களின் தேவைக்காக நடமாடும் எரிபொருள் விநியோகஸ்தர்களால் எரிபொருள் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சனா விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியின் படி, முச்சக்கர வண்டிகள், டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்கான பெரிய திறந்தவெளிகளில் எரிபொருள் வாகனங்கள் மூலம் எரிபொருள் நிரப்பப்படும்.
இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mobile Fuel Dispensers will be used as a Pilot project to Fuel Three Wheelers & Generator Requirements. The Fuel Truck dispensers will be used in large open spaces away from the fuel stations for Three Wheelers, Delivery Bikes & Cans. Hope to implement this islandwide soon. pic.twitter.com/AOAAhziWaE
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 17, 2022