லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நியாயமற்ற இலாபம் குறித்து புகார்கள் வந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புகார்கள் இருப்பின், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறைக்கு 1345 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதேவேளை தற்போதுள்ள எரிவாயு வரிசைகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என லிட்ரோ எரிவாயு சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எரிவாயு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் எரிவாயு வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.