ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
இதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2:00 மணி வரை நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 1 மற்றும் 2ம் திகதிகளில் வரவு செலவு மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
இதற்கிடையில், எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.