காத்தான்குடி, மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 01 இல் கல்விகற்றுவரும்
மாணவி பாத்திமா ஸப்னம் இமாரா 30 வினாடிகளில் 47 வகையான பூச்சிகளின் பெயரை அசூர வேகத்தில் கூறி சாதனை புரிந்து ஆசிய புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இவர் வைத்தியர் ஹுஸ்னி (MBBS) மற்றும் சப்னம் சன்ஸிதாவின் புதல்வியும் ரபீக்(PHI), முஹம்மத் சனூன் ஆகியோரின் பேத்தியுமாகும்.
இச் சிறுமியின் திறமையை பாராட்டியும் ஆசிய சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்தமைக்காகவும் உலக World Book of Records London இனால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவதில் மிகப்பெரும் சாதனையாளராக தனது பெயரை ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவுசெய்து ஊருக்கும் உறவுகளுக்கும் பெருமை பெற்றுக்கொடுத்திருக்கும் இச் சிறுமி எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் பதிவு செய்ய வேண்டும் என NEWSNOW வாழ்த்துவதோடு அவருக்காக பிரார்த்தனையும் செய்கின்றது.
(எம்.பஹ்த் ஜுனைட்- ஊடகவியலாளர்)