சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், இந்தியா 21,000 தொன் உரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
நெருக்கடி நிறைந்த விவசாயிகளுக்கு ஆதரவாக உரங்களை இந்தியா அனுப்புவது இரண்டாவது முறையாகும்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
அதில் நட்பு மற்றும் ஒத்துழைப்பை சேர்க்கும் வகையில், உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு இந்தியாவின் சிறப்பு ஆதரவின் கீழ் வழங்கப்பட்ட 21,000 தொன் உரங்களை முறையாக கையளித்தார்.
‘இந்த உரமானது உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் மற்றும் இலங்கையின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும்.
இது இந்தியாவுடனான நெருக்கமான உறவுகள் மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை வெளிப்படுத்துகிறது’ என்று உயர்ஸ்தானிகராலயம் மேலும் பதிவிட்டுள்ளது.
இலங்கையின் தேவைக்கு ஏற்ப பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருப்பதுடன், தேவைப்படும் நேரத்தில் அதிக ஆதரவை வழங்கியுள்ளது.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் யாழைப் பயிர்ச்செய்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை வழங்குவதாக மே மாதம் இலங்கைக்கு இந்தியா உறுதியளித்திருந்தது. இலங்கையில், நெல் வளரும் பருவம் மே முதல் ஆகஸ்ட் வரை இருக்கும்.
அதேநேரம் இந்திய அரசாங்கம் இந்த வருடத்தில் மட்டும் இலங்கை மக்களுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பலமுனை ஆதரவை வழங்கியுள்ளது.
இது பல்வேறு மருத்துவமனைகள், இலங்கையில் உள்ள இந்திய சமூக அமைப்புகள் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட பல நிறுவனங்களின் சுயாதீன முயற்சிகளால் துணைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.