இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: (படங்கள்)

Date:

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காசாவில் வீடுகளை தரை மட்டமாக்கியுள்ளதுடன் பாலஸ்தீனிய ரொக்கெட்டுகள் இரண்டாவது நாளாக தெற்கு இஸ்ரேலைக் குறிவைத்துள்ளது.

காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இரண்டு நாட்கள் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 203 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா நகரில் உள்ள நான்கு குடியிருப்பு கட்டிடங்கள் மீது போர் விமானங்கள் நேரடியாக தாக்குதல்களை முடுக்கிவிட்டன. அனைத்து இடங்களும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று மற்றொரு விமானத் தாக்குதலில் ஒரு கார் அழிக்கப்பட்டதுடன் 75 வயதான பெண் கொல்லப்பட்டார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவரின் வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசின.

இதேவேளை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வருகிறது.

இரு தரப்பினரும் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

உயரமான கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து புகை வெளியேறும் காட்சி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

இதில் மூத்த போராளி உட்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...