2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமய மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தையும் உயிரியலில் பிரிவில் அமாஷா நிஷாமணி நாடளாவிய ரீதியில் பகுதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, குருநாகல் கெகுணுகொல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இர்பான் முகம்மது இன்ஷாப் முகம்மது ஹுஸைன் பாத்திமா ஹனா இருவரும் வைத்தியத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
திணைக்களத்தின் படி, 171,497 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தகுதிகளை பெற்றுள்ளனர். 2021 தேர்வில் மொத்தம் 272,682 விண்ணப்பதாரர்கள் இருந்தனர்.
அவர்களில் 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.