உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையின் படி கொழும்பு பல்கலைக்கழகம் முன்னேறுகிறது!

Date:

உலகப் பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின்படி, இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.

பின்னர் ருஹுணு, களனி, ரஜரட்ட, யாழ்ப்பாணம், வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் திறந்த பல்கலைக்கழகம் முறையே ஐந்தில் இருந்து 12ஆவது இடத்துக்கு தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, உலகின் சிறந்த பல்கலைக் கழகமாக, முதல் இடத்தை அமெரிக்க ‘ஹார்வர்டு’ பல்கலையும், இரண்டாம் இடத்தை ‘ஸ்டான்போர்ட்’ பல்கலையும் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே பல்கலைக் கழகங்களே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.

உலக தரவரிசையில் இலங்கையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழகம் 1531வது இடத்தையும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் 1964வது இடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் 1974வது இடத்தையும் பெற்றுள்ளது.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றிருந்ததுடன், உலகத் தரவரிசையின்படி 1591ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. அதன்படி இந்த ஆண்டு உலக தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறியுள்ளது.

கடந்த வருடம், இலங்கையின் பல்கலைக்கழகங்களில், பேராதனைப் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், ருஹுணு பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றிருந்தன.

‘வெபோமெட்ரிக்ஸ் யுனிவர்சிட்டி தரவரிசை’ என்பது ஸ்பானிஷ் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனமான ‘சைபர்மெட்ரிக்ஸ் லேப்’ மூலம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பாகும், இது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...