கடன் விவகாரம் குறித்து விவாதிக்க ஏனைய கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் : ஜப்பான்!

Date:

கடன் விவகாரம் குறித்து விவாதிக்க இலங்கையின் அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டோக்கியோ இந்த விஷயத்தில் மற்ற கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் ராய்ட்டர்ஸிடம், இருதரப்புக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கேட்கும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக செவ்வாய்கிழமை, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு  எந்த செயற்பாடும் இலங்கையுடன் நடைபெறவில்லை’ என்று ஹயாஷி ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் கூறினார்.

Popular

More like this
Related

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...