கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!

Date:

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...