காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணின் வீசா ரத்து!

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கெய்லி ஃப்ரேசர் எனப்படும் குறித்த பெண் தான் தங்கியிருந்த காலத்தில் காலி முகத்திடல் போராட்டத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஊக்குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இலங்கையில் அவர் தங்கியிருந்த இடத்தை அணுகி  அவர் தங்கியிருப்பதற்கான காரணத்தை ‘சந்தேகத்துக்குரியது’ எனக் கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...