கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார்: முஜிபுர்

Date:

அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழலை நிறுத்துவது பற்றி ஜனாதிபதி கூற மறந்துவிட்டதாகவும், இதுவரை நடந்த ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எந்த இடத்திலும் ஊழலை நிறுத்துவோம் என்றோ, கடந்த காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிப்போம் என்றோ கூறவில்லை என்றார்.

சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது வெறுப்பு அதிகமாக காணப்படுவதாகவும், அந்த வெறுப்பு எதனால் ஏற்பட்டது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

போராடும் இளைஞர்கள் ‘கபரகோயா, தலகோயா சாப்பிடும் பாரம்பரியத்திற்கு உயர்ந்து விட்டனர் என்றும் இதை அரசியல் ரீதியாக படிக்க முடியாவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில் விழுந்து விடுவார்கள் என்றும் முஜுபுர் ரஹ்மான் கூறினார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...