கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு!

Date:

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் நாட்டில் மேலும் 184 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இந்த தொற்றாளர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,764 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் மூன்று கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை 16,586 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...