சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்காலத்தில் குறித்த தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடன் உதவிகளை வழங்கும் முக்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை நம்புவதாக அவர் கூறினார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.