சவூதி பட்டத்து இளவரசர் இலங்கை ஜனாதிபதியிடமிருந்து எழுத்துமூல செய்தியைப் பெற்றார்!

Date:

சவூதி அரேபியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) எழுத்துமூல செய்தியைப் பெற்றதாக அஷ்ஷர்க் சவூதி செய்தி வெளியிட்டுள்ளார்.

இரு நாட்டு நட்பு நாடுகளையும் மக்களையும் இணைக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர், இலங்கை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவின் சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்களது சந்திப்பில் பேசப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...