தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்!

Date:

தனியார் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அகில இலங்கை தனியார் பஸ்கள் நேற்று 4 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஒரு பஸ்ஸிற்கு 40 லீற்றர் டீசல் மட்டுமே விநியோகம் செய்வது முற்றிலும் போதாது என தெரிவித்து மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனால் அரச பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன. அரச பஸ்கள் போதியளவு சேவையில் ஈடுபடாமையால் மக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

இன்றையதினம் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் வீதிகளில் பஸ்களுக்காக காத்திருந்த வண்ணம் உள்ளனர். பலர் பல கிலோ மீற்றருக்கு நடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டது. இந்நிலையில், பஸ் கட்டணத்தை குறைத்தும் எங்களால் நிம்மதியாக பஸ்ஸில் பயணிக்க முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அத்துடன் எரிபொருள் நெருக்கடியால் கியூ. ஆர். முறைமூலம் எரிபொருட்கள் பகிர்ந்தளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களின் நலனுக்காக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமை மக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...