தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்குமாறு வடிவேல் சுரேஷினால் கடிதம்!

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாக 3250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய அமைச்சின் சம்பள நிர்ணய சபையின் செயலாளர் எச்.ஜி.வசந்த குணவர்தன தொழில் அமைச்சின் செயலாளர்  ஆர்.பி.ஏ விமலவீர தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோருக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் சங்கத்தின் உப தலைவர் சுஜித் சஞ்சய பெரேரா சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதைய வாழ்க்கை பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் வேதனத்தை 3250 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக வடிவேல் சுரேஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இக்கடிதத்தை ஏற்று உடனடியாக சம்பள நிர்ணய சபையினை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர்.

வழமை மாறாத சலுகைகள் உடனேயே வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதியாக இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...