அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுதுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைகழக மாணவர் சம்மேளனம் யூனியன் பிளேஸில் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.