தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்தும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி கெலிக் பிரேசர் என்ற பிரித்தானிய பெண் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை ரத்து செய்ய குடிவரவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.