மட்டக்களப்பு புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் பிரபாகரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

Date:

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிராபாகரன் இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிரபாகரன் நேற்று நண்பகல் 12 மணியளவில் தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பதில் அத்தியட்சகர் கே.வர்ணகுலசூரிய, பிரதம ஜெயிலர் .எஸ்.மோகன் ராஜ் உள்ளிட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றிய இவர் அதே ஆண்டில் சுப்பர் கிரோட்டில் சித்தியடைந்து பதவியுயர்வு பெற்று 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் சிரேஸ்ட தரத்தை சேர்ந்த இவர் 2020 ஆண்டு இலங்கையில் பெரிய சிறைச்சாலையான தும்பாறை மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகளில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிய பின்னர் 2021 களில் வவுனியா சிறைச்சாலையில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிவந்த நிலையில் நேற்று 12.08.2022 திகதி முதல் மட்டக்களப்பு சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...