ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த வாரம் பொதுமன்னிப்பு?: நீதி அமைச்சர்

Date:

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இழைக்கப்பட்ட குற்றத்துக்காக மன்னிப்புக் கோரும் கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்கவும் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உச்ச நீதிமன்றினால் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் முதலில் அங்குனுகொலபலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர், ரஞ்சன் ராமநாயக்க, தற்போதுள்ள உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது, ​​சிறை மருத்துவமனையில் தனித்தனியாக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...