ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம்!

Date:

கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசனங்கள் முற்பதிவு செய்யப்படும் பதுளை – கொழும்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதால், நாளாந்தம் 2 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த நட்டம் பதிவாகியுள்ளது.

நாவலப்பிட்டி – நானுஓயா இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த ரயில்களையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு – பதுளை இடையிலான தபால் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...