ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்த நால்வர் கைது!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவிற்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி கொங்கலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு சந்தேகநபர்கள் சொத்துக்களை திருடி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய சந்தேகநபர்கள் கொலன்னாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கிழமை (22) மற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட கொலன்னாவை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொலன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மே 10 அன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் சொகுசு ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்ட உடனேயே, அந்த ஹோட்டல் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகின.

அந்த ஹோட்டல் யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை அவர் உடனடியாக நிராகரித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்த ஹோட்டல் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஹோட்டல் அவரது சகோதரருக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியானபோதும் வாய் திறக்காமல் இருந்துள்ளார்.

ரோஹித தனது தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை, இருப்பினும் அவர் அடிக்கடி அலரிமாளிகையில் காணப்பட்டார் மற்றும் அவரது வருமான ஆதாரம் குறித்து அடிக்கடி விசாரிக்கப்பட்டார்.

தீ வைப்புத் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...