அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை!

Date:

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, அரச அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது அல்லது புதிய குத்தகை அல்லது குத்தகை ஒப்பந்தங்களை மேற்கொள்வதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச தேவைகளுக்காக வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போதுள்ள ஒப்பந்தங்களை நீடிப்பதற்கு முன்னர் திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயன்றவரை காகித பாவனையை குறைத்து தேவையான செயற்பாடுகளை இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் ஊடாக மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...