அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை!

Date:

இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அரிசி வியாபாரிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி உள்ளதாகவும் அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 50,000,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருட இறுதி வரை அரிசி இறக்குமதி தொடர்ந்தால் அரிசியின் அளவு 50 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன்னை தாண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் உட்பட வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...