ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலி!

Date:

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளனர்.

புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடந்தது. மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்கு வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாதிகளும், ஐ.எஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது ஆப்கனில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தலிபன்கள் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

அந்த விளைவாய் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையேற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில் மசூதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும்.

அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஆப்கனில் தலிபன்கள் ஆட்சிக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...