இன்று நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள்!

Date:

இன்று (09) தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

மக்கள் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மக்கள் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்திற்கான சரியான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதியை வலியுறத்துவது இதன் நோக்கமாகும் என அதன் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.

அத்துடன், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...