இலங்கை குறித்து பிரித்தானிய அரசின் முக்கிய தீர்மானம்!

Date:

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நிலை பிரகடனத்தை அடுத்து மே மாதம் பயண ஆலோசனை பிரித்தானிய புதுப்பித்தது.

இந்நிலையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை இரத்து செய்துள்ள பிரித்தானியா, பாதுகாப்பு நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தாலும் எரிபொருள், மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது.

ஆகவே இலங்கைக்கு பயணிக்கத் திட்டமிடும் தமது நாட்டவர்களை தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து தொடர்பாக உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...