எரிபொருட்களை வர்த்தகம் செய்யும் புதிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு புதிய குழு!

Date:

எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக பல நிறுவங்கள் ஈடுபட முடியும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது.

குழுவின் பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறும் அமைச்சர் விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...