எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம்!

Date:

அடையாளம் காணப்பட்ட ஒரு துறைக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

QR முறைமை தொடர்பில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த 03 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது, ​​வாகன பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் எரிபொரள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து அல்லாத எரிபொருள் தேவைகள் மற்றும் சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், QR அமைப்பின் ஊடாக பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளைச் செய்வதற்கும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...