கடத்தப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த சிறுமி: 08 நாட்களுக்குப் பின்னர் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டார்!

Date:

லுனுகல பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக உடகிருவ காப்புக்காட்டில் மறைத்து வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க காப்புக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் லுணுகல மற்றும் பேருவளை பிரதேசங்களில் வசிக்கும் 18 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் சிறுமியையும் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததன் பின்னர், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக லுனுகல வைத்தியசாலையின் வைத்தியர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடத்தப்பட்டதாகவும் லுணுகல பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் பசறை மற்றும் லுணுகல முகாம்களில் இந்த கூட்டுச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...