திருமலை பகுதியைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவருமே கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளனர்.
தற்போது சவூதியில் வசிக்கும் ஹிஜாஸ்- மஸாஹினா தம்பதியினரான இவர்கள் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (International Islamic University of Malaysia – IIUM) கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துவிட்டு, இப்போது சவூதி அரேபியாவில் விரிவுரையாளர்களாக உள்ளனர்.
ஹிஜாஸ் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வித் துறையில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்.
சவூதி அரேபியாவின் தலைநகரான றியாத் நகரில் இயங்கும் பொது நிர்வாக நிறுவனத்திலுள்ள (Institute of Public Administration) ஆங்கில மொழி மையத்தில் (English Language Center) விரிவுரையாளராகப் பணி புரிகிறார்.
அவரது மனைவி மஸாஹினா சராப்டீன் கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எங்களது டியவஉh-அயவந. பொருளியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
றியாத் நகரிலுள்ள இளவரசி நூறா பின்த் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் (Princess Nourah Bint Abdul Rahman University- PNU), தற்போது துணைப் பேராசிரியராக (Assistant Professor) உள்ளார்.
வியாபார மற்றும் நிர்வாக பீடத்தின் கீழியங்கும் (Faculty of Business and Administration) பொருளியல் துறையில் பணி புரிகிறார்.
கலாநிதி மஸாஹினா சராப்டீன், ஒரு வருட காலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.
அதேநேரம், இதற்கு புலமைப் பரிசிலோ பெரிய நிதி ஆதாரங்களோ இவர்களுக்கு இருக்கவில்லை. மலேசியாவில் இருக்கும்போது, பகுதிநேர தொழில் செய்து கொண்டே தங்களது கல்விப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம், பிள்ளைகளின் படிப்பு – இவற்றிற்கு மத்தியில் இந்த அடைவு பெரிய சாதனைதான். கடின உழைப்புக்குக் கிடைத்தை வெற்றி இது என்பதுடன் பலருக்கு முன்னுதாரணமான இந்த அடைவை வாழ்த்தியாக வேண்டும்.
(சிராஜ் மஷ்ஹூர்)