இந்த நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 நோயாளிகளாக சுகாதாரத் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பரவி வரும் இந்நோயை தடுப்பதற்கு சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் இந்நோய் மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னைய நோய்த்தடுப்பு மருந்துகளினால் இந்நோய் பரவுவது ஓரளவு தடைபட்டிருந்த போதிலும், சமூகத்தில் மீண்டும் அதே அறிகுறிகளுடன் பலரை சந்திப்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றார்.
இந்நோய் மேலும் பரவினால் சமூகக் கூட்டங்கள் நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.