யுனிசெப் அமைப்பின தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் இலங்கையில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு குறித்து வெளியிட்ட பாரதூரமான கருத்து தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு தொடர்பில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் அமைதி காத்து வருவது ஆச்சரியமளிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டனில் தெரிவித்தார்.
மேலும் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 30 ரூபாய், முட்டையின் விலை 60 ரூபாய், எனவே பாடசாலைகளுக்கு உணவு வழங்குவதற்கு உணவு வழங்குநர்கள் ஒப்பந்தம் போடுவதில்லை என்றும் ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.