எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்று (29) மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.
எரிபொருள் இருப்பு இல்லாத காரணத்தால் இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை காணக்கூடியதாக உள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற அடையாளத்தை காட்டியுள்ளனர்.
எரிபொருள் இருப்புக்களை ஆர்டர் செய்த போதிலும் உரிய கையிருப்பு கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.