தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாட்டைத் தேடுவார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா இன்று (11) முடிவடைந்தது.
மேலும் தாய்லாந்தின் பிரதமர் மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய தாய்லாந்திற்கு வர அனுமதிக்கப்பட்டார் என்றும், வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் கோரி தாய்லாந்தில் எந்த அரசியல் பணிகளையும் செய்ய மாட்டேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.
கோட்டாபய ராஜபக்சவிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருப்பதால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் டொன் பிரமுத்வினை தெரிவித்துள்ளார்.