ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.
ஜி.எஸ்.பி , சர்வதேச நாணய நிதியம்,மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இதனை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு எதிர்நோக்கும் சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.