சீனாவின் எச்சரிக்கையை மீறி தாய்வான் சென்ற அமெரிக்க சபாநாயகர்!: அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட சபாநாயகரின் விமானம்

Date:

அமெரிக்கவின் பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் பயணமாகியுள்ளார்.

இந்நிலையல் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தாய்வானுக்குச் சென்றமையானது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது.

‘நெருப்புடன் விளையாடுகிறார், நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றடைந்தார்.

தாய்வானில் தரையிறங்கும் போது விமானப்படை ஜெட் விமானங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தன.

பல்வேறு ஆசிய நாடுகளுக்கு சுற்றுபயணத்தை தொடங்கியிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று இரவு தாய்வான் சென்றடைந்தார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா உயர்மட்ட தலைவர் ஒருவர் தாய்வான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

தாய்வானை சீனா தங்களது நாட்டின் ஒரு பகுதியாக இன்னமும் கூறி வருவதாலும், நான்சி பெலோசியின் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஏற்பட்டுள்ள பதட்டத்தாலும் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தாய்வானுக்கு வந்த நான்சி தாய்வான் விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன.

அமெரிக்கா எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், தனது 4 போர் கப்பல்களை தாய்வானின் கிழக்கு பகுதியில் நிறுத்தியுள்ளது. இதில் ஒரு விமான தாங்கி போர் கப்பலும் அடங்கும்.

நான்சி பெலோசியை வரவேற்கும் வகையில் தாய்வானின் உயரமான கட்டிடமான தைபே 101-இல், வாசகங்கள் ஒளிர விடப்பட்டன.

தாய்வானில் தரையிறங்கிய சில நிமிடங்களில் ட்விட்டரில் பதிவிட்ட நான்சி பெலோசி, ஜனநாயகத்தை காக்க தங்கள் ஆதரவை உறுதிபடுத்தவே தங்கள் குழுவினருடன் தாய்வான் வந்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தாய்வான் பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி குறிப்பிட்டார்.

நெருப்புடன் விளையாடுவது போன்ற இந்த நகர்வுகள் மிகவும் ஆபத்தானவை என்றும், நெருப்புடன் விளை யாடுபவர்கள் இதனால் அழிந்து போவார்கள் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சர்வதேச விமான கண்காணிப்பு சேவை நிறுவனமான பிளைட் ரேடார் 24ன் தகவல் தொடர்பு இயக்குனர் இயன் பெட்செனிக் கூறியதாவது

அமெரிக்காவில் இருந்து சபாநாயகர் பெலோசி பயணித்த போயிங் ட் ஸ்பெர் 19 விமானம் புறப்பட்டது முதலே மக்களின் கவனத்தைப் பெற ஆரம்பித்தது.

செவ்வாயன்று விமானம் புறப்பட்டது முதல் எங்கள் சேவையில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம் இதுவாகும்.

பின்னர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கடந்த போது, எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமான கண்காணிக்கப்பட்ட விமானம் ஆனது.

தைவானின் தைபேயில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு வரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...