ஜனாதிபதி பிரதமராக இருந்த போது வழங்கிய வாக்குறுதி தொடர்பில் சஜித் கேள்வி!

Date:

ஜனாதிபதியும், சபாநாயகரும் கூறியது போல், பொது விவகாரக் குழுவின் தலைவர் பதவிகளையும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிகளையும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (ஆகஸ்ட் 29) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கான ஆயத்தங்கள் உள்ளதா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது வர்த்தக குழு மற்றும் பொது கணக்குகள் குழுவின் தலைவர் பதவிகளுக்கு ஈரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா? மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, அதேபோன்று கோப் மற்றும் கோபா தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கும் வகையில் நிலையியற் கட்டளைகள் மாற்றப்படுமா? சஜித் பிரேமதாச மேலும் கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...