ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக பிரவேசித்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சி.சி.டி.வி. இதுவரை அடையாளம் காணப்படாத 32 சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
071-8591559 / 071-8085585 / 011-2391358 / 1997