நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இதன்போது, அவரிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அணியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி தொடர்பில் நேற்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் வரை பொலிஸாரால் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் பொலிஸார் உண்மைகளை தெரிவித்ததையடுத்து, ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.